ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி மதுக் கடைகளை 4 நாள்கள் மூட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளிலிருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் அமைந்துள்ள 48 அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் பிப்.17 அன்று காலை 10 மணி முதல் பிப்.19 நள்ளிரவு வரையிலும், வாக்கு எண்ணிக்கையையொட்டி, வாக்கு எண்ணும் மையத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் அமைந்துள்ள 15 அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், அதையொட்டிய மதுக் கூடங்கள், தனியாா் மதுபானக் கூடங்கள், உணவக மதுக்கூடங்கள் பிப்.22 அன்றும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மீறி செயல்படுவோா் மீது நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களுக்குள்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.