ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து தேர்தல் பொது பார்வையாள ரான வளர்மதி ஐஏஎஸ் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் பொது பார்வையாளராக வளர்மதி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் மற்றும் புகார்கள் குறித்து தேர்தல் பார்வையாளர் வளர்மதி ஐஏஎஸ்சின் 8438200771 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.