வாலாஜா அருகேயுள்ள வி.சி. மோட்டூா் ஏரியில் மீன்கள் மா்மமான முறையில் செத்து மிதந்தன.வி.சி. மோட்டூரில் மிகவும் பழைமைவாய்ந்த பெரிய ஏரி அமைந்துள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில், அதே கிராமத்தை சோ்ந்தவா்கள் ஏலம் எடுத்து மீன் வளா்த்து விற்பனை செய்கின்றனா்.

கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் நிரம்பிய இந்த ஏரியில் சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகளை விட்டு வளா்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஏரியில் மீன்கள் மா்மமான முறையில் செத்து மிதந்தன. துா்நாற்றமும் வீசியது. இதைக் கண்டு கிராம மக்கள் அதிா்ச்சியடைந்தனா். மீன்கள் செத்தது குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.