👉 1958ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதலாவது செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.

👉 1959ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி லூனா 1 சந்திரனுக்கு மிக அருகில் சென்றது.

👉 1643ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளருமான ஐசாக் நியூட்டன் பிறந்தார்.

👉 1854ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி வில்லியம் மெக்டொனால்ட், மெக்டொனால்ட் தீவுகளை கண்டுபிடித்தார்.


நினைவு நாள் :-


ஜி.டி.நாயுடு

👉'இந்தியாவின் எடிசன்' என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியல் மேதையும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு) 1893ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார்.

👉இவர் அதிகம் படிக்கவில்லை என்றாலும் பல நூல்களை வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக்கொண்டார். இவர் 18 வயதில் அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணியை அங்கிருந்து வரவழைத்து, இங்கு விற்பனை செய்தார். அதில் லாபமும் கிடைத்தது.

👉பிறகு இவர் பைக்கை, பக்கவாட்டில் இன்னொருவர் அமரும் வகையில் வடிவமைத்தார். திருப்பூரில் பருத்தி ஆலை தொடங்கினார். இதன் மூலம் பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். அதன்பின் தொழிலில் எதிர்பாராதவிதமாக நஷ்டம் ஏற்பட்டது. பிறகு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு பொள்ளாச்சி பழநி இடையே பஸ் சர்வீஸ் நடத்தினார்.

👉அதன்பின்பு 'யுனிவர்செல் மோட்டார் சர்வீஸ்' நிறுவனத்தை தொடங்கினார். பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி, பயணச்சீட்டு வழங்கும் கருவி, இன்ஜின் அதிர்வைக் கண்டறியும் கருவி, பழச்சாறு பிழியும் கருவி, வெட்டுக் காயம் இல்லாமல் முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என தொடர்ந்து பல பொருட்களை உருவாக்கினார்.

👉ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி, பிளேடுக்கு முதல் மற்றும் 3-வது பரிசுகள் கிடைத்தன. இவற்றை தயாரிக்கும் உரிமையை பல நாடுகள் கேட்டும் மறுத்த இவர், இறுதியாக அமெரிக்க நிறுவனத்திற்கு அந்த உரிமையை கொடுத்துவிட்டார்.

👉இவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே பிரமிக்க வைத்தன. இவரது அதிசய பருத்திச் செடிக்கு 'நாயுடு காட்டன்' என பெயரிட்டு ஜெர்மன் கௌரவித்தது.

👉சாதாரண கிராமத்தில் பிறந்து பல அரிய சாதனைகளை படைத்த ஜி.டி.நாயுடு தனது 80-வது வயதில் 1974ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி மறைந்தார். கோவை அவிநாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி, அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.


பிறந்த நாள் :-


லூயி பிரெயில்

🌟 இருளின் சிறையில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் கொடுத்த லூயி பிரெயில் 1809ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார். இவருடைய பிறந்த தினமே சர்வதேச பிரெயில் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

🌟 லூயி மூன்று வயதில் தன்னுடைய தந்தையின் பட்டறையில் விளையாடி கொண்டியிருக்கும் போது ஊசி அவருடைய கண்ணில் பட்டு பார்வையை இழந்தார். அதன்பின் மற்றொரு கண்ணிலும் பரிவுக்கண் நோய் ஏற்பட்டு பார்வையை இழந்தார்.

🌟 இவருக்கு பார்வை திறன் இல்லாவிட்டாலும், புரிந்துகொள்ளும் சக்தி அதிகமாக இருந்தது. எனவே 1819ஆம் ஆண்டு விழி இழந்த இளைஞருக்கான நிறுவனத்தில் பிரெயில் சேர்க்கப்பட்டார்.

🌟 லூயி படிக்கும் நிறுவனத்திற்கு பிரான்ஸ் ராணுவத்தில் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற சார்லஸ் பார்பியா என்பவர் வருகை தந்து எந்த ஒளியையும் பயன்படுத்தாமல் தகவல்களை பரிமாற்றம் செய்யும் முறையை (நைட் ரைட்டிங்) விளக்கினார். இது விரல்களால் பேப்பரைத் தடவிப்பார்த்து எண்ணங்களை பரிமாற்றம் செய்யும் முறை.

🌟 பிரெயில், இந்தப் புதிய முறையைக் கற்றுக்கொண்டு, அதில் சில முன்னேற்றங்களையும் கொண்டு வந்தார். கடைசியாக புள்ளிகளை எண்ணி எண்ணி எழுத்துக்களை புரிந்துகொள்ளும் பிரெயில் முறையை உருவாக்கினார். பிரெயிலின் இந்த புதிய முறையை விளக்கும் முதல் புத்தகம் 1820ஆம் ஆண்டுகளின் இறுதியில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான அங்கீகாரம் அப்போது கிடைக்கவில்லை.

🌟 1932ஆம் ஆண்டு கூடிய சர்வதேச மாநாட்டில் தான் பிரெயில் முறைக்கு அதிகாரபூர்வமான அங்கீகாரத்தை வழங்கியது. இவர் தனது 43வது வயதில் (1852) மறைந்தார்.


ஜே.சி.குமரப்பா

🌹 வளம் கொடுக்கும் பொருளியல் மாதிரியை வடிவமைத்த ஜே.சி.குமரப்பா 1892ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தார்.

🌹 இவர் இந்தியாவின் ஏழ்மை நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்தியாவின் ரத்தத்தை எப்படியெல்லாம் பிரிட்டிஷ் அரசு சுரண்டுகிறது என்பதை அறிந்தார். தனது ஆராய்ச்சிக் கட்டுரையை காந்திஜியின் முகவுரை வேண்டி அவருக்கு அனுப்பினார். இதுவே இருவருக்கும் நெருக்கம் ஏற்படக் காரணமாக அமைந்தது.

🌹 இவருடைய நூல்கள் பலவற்றுக்கு காந்திஜி முன்னுரை எழுதியுள்ளார். இவர் தன்னுடைய 68-வது வயதில் (1960) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


871 – ரெடிங் என்ற இடத்தில் நடந்த சமரில் ஆல்பிரட் தென்மார்க் ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் தோற்றார்.

1384 – அந்தவட்டி இராச்சியத்தின் (இன்றைய பர்மாவில்) மன்னராக ராசதாரித் முடிசூடினார்.

1493 – கொலம்பசு தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார்.

1642 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை அனுப்பினார்.

1649 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: ரம்ப் நாடாளுமன்றம் முதலாம் சார்ல்சு மன்னரை விசாரணை செய்ய அனுமதித்தது.

1717 – நெதர்லாந்து, பெரிய பிரித்தானியா, பிரான்சு ஆகிய நாடுகள் உத்ரெக்ட் உடன்பாட்டைத் தக்கவைக்க முத்தரப்பு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன.

1762 – எசுப்பானியா, நாபொலி ஆகிய நாடுகள் மீது இங்கிலாந்து ஏழாண்டுப் போரை ஆரம்பித்தது.

1798 – உதுமானியர்களினால் வலாச்சியாவின் புதிய இளவரசராக நியமிக்கப்பட்ட கான்சுடன்டைன் அங்கெர்லி புக்கரெஸ்ட் வந்து சேர்ந்தார்.

1847 – சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் கைத்துப்பாக்கியை அமெரிக்கஅரசுக்கு விற்றார்.

1854 – கப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் மக்டொனால்ட் தீவுகளைக் கண்டுபிடித்தார்.

1878 – சோஃபியா நகரம் உதுமானியரின் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று 1879 இல் விடுதலை பெற்ற பல்காரியாவின் தலைநகரானது.

1889 – இலங்கையில் சபரகமுவா மாகாணம் என்ற புதிய மாகாணம் சேர் ஈ. என். வோக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது.[1]

1896 – யூட்டா 45வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.

1912 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் சாரணர் இயக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்டது.

1918 – பின்லாந்தின் விடுதலையை உருசியா, சுவீடன், செருமனி, பிரான்சு ஆகியன அங்கீகரித்தன.

1948 – பர்மா ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்று குடியரசானது. யு நூ அதன் முதலாவது பிரதமர் ஆனார்.

1951 – கொரியப் போர்: சீனா மற்றும் வட கொரியப் படைகள் சியோல் நகரைக் கைப்பற்றின.

1958 – 14 வயது பொபி ஃபிஷர் ஐக்கிய அமெரிக்காவின் சதுரங்க வாகையாளர் போட்டியில் வெற்றி பெற்றார்.

1958 – முதலாவது செயற்கைக் கோள் இசுப்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.

1959 – சோவியத்தின் லூனா 1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது.

1966 – பிரெஞ்சு மேல் வோல்ட்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு தேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

1976 – வட அயர்லாந்தில் ஓர்மா நகரில் புரட்டத்தாந்து அல்சுட்டர் படையினர் ஆறு கத்தோலிக்கர்களைச் சுட்டுக் கொன்றனர். இதற்குப் பதிலடியாக, அடுத்த நாள் பத்து புரட்டத்தாந்து பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1987 – அமெரிக்காவில் பாஸ்டன் நோக்கிச் சென்ற தொடருந்து ஒன்று வேறொன்றுடன் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர்.

1989 – லிபியாவின் இரன்டு மிக்-23 ரக விமானங்கள் அமெரிக்கக் கடற்படையின் எப்-14 வானூர்திகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

1990 – பாக்கித்தானில் சிந்து மாகாணத்தில் பயணிகள் தொடருந்து ஒன்று சரக்கு தொடருந்துடன் மோதியதில் 307 பேர் உயிரிழந்தனர்.

1998 – அல்சீரியாவில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் 170 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2004 – இசுப்பிரிட் என்ற நாசாவின் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கியது.

2010 – உலகின் அதியுயர் கட்டடம் புர்ஜ் கலிஃபா துபாயில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

2018 – தென்னாப்பிரிக்காவில் பயணிகள் தொடருந்து ஒன்று பாரவுந்து ஒன்றுடன் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்


1643 – ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1726/27)

1785 – ஜேக்கப் கிரிம், செருமானிய பண்பாட்டு ஆராய்ச்சியாளர், மொழியியலாளர் (இ. 1863)

1809 – லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தைக் கண்டுபிடித்த பிரான்சியர் (இ. 1852)

1813 – ஐசக் பிட்மன், ஆங்கிலேய மொழியியலாளர் (இ. 1897)

1889 – பதஞ்சலி சாஸ்திரி, இந்தியாவின் 2வது தலைமை நீதிபதி (இ. 1963)

1892 – ஜே. சி. குமரப்பா, தமிழகப் பொருளியலாளர் (இ. 1960)

1904 – எஸ். எஸ். வாசன், தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர் (இ. 1969)

1940 – பிறையன் ஜோசப்சன், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர்

1941 – க. துரைரத்தினசிங்கம், இலங்கை அரசியல்வாதி (இ. 2021)

1944 – மல்லிகை சி. குமார், இலங்கை மலையக எழுத்தாளர், ஓவியர் (இ. 2020)

1954 – ஞாநி சங்கரன், தமிழக எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர் (இ. 2018)

1963 – மே-பிரிட் மோசர், நோபல் பரிசு பெற்ற நோர்வே உளவியலாளர், நரம்பணுவியலாளர்

1964 – பிரபா கணேசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

1984 – ஜீவா, தமிழ்த் திரைப்பட நடிகர்

இன்றைய தின இறப்புகள்


1904 – அன்னா வின்லாக், அமெரிக்க வானியலாளர் (பி. 1857)

1908 – சார்லசு அகத்தசு யங், அமெரிக்க வானியலாளர் (பி. 1834)

1929 – சேசாத்திரி சுவாமிகள், தமிழக சித்தர் (பி. 1870)

1941 – என்றி பெர்குசன், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1859)

1960 – அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. 1913)

1961 – எர்வின் சுரோடிங்கர், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய இயற்பியலாளர் (பி. 1887)

1965 – தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க-ஆங்கிலேயக் கவிஞர், நாடகாசிரியர் (பி. 1888)

1974 – அண்ணல் தங்கோ, தனித்தமிழ் அறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1904)

1974 – ஜி. டி. நாயுடு, இந்திய அறிவியலாளர் (பி. 1893)

1976 – உருடோல்ப் மின்கோவ்சுகி, செருமானிய-அமெரிக்க வானியலாளர் (பி. 1895)

1994 – திருக்குறள் வீ. முனிசாமி, தமிழகத் தமிழறிஞர், அரசியல்வாதி (பி. 1913)

1994 – ஆர். டி. பர்மன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1939)

2004 – வசுமதி இராமசாமி, தமிழக எழுத்தாளர், வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1917)

2005 – கிருஷ்ணா வைகுந்தவாசன், இலங்கை சட்டத்தரணி, தமிழ் ஆர்வலர், தொழிற்சங்கவாதி (பி. 1920)

2010 – சுடோமு யாமகுச்சி, சப்பானியப் பொறியியலாளர் (பி. 1916)

2017 – அப்துல் ஹலீம் ஜாபர் கான், இந்திய சித்தார் கலைஞர் (பி. 1927)

இன்றைய தின சிறப்பு நாள்


தியாகிகள் நாள் (காங்கோ சனநாயகக் குடியரசு)

விடுதலை நாள் (மியான்மர், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1948)

குடியேற்ற அடக்குமுறைக்கு எதிரான வீழ்ச்சி நாள் (அங்கோலா)

உலக பிரெயில் நாள்