ராணிப்பேட்டை மாவட்ட பஞ்., கவுன்சில் நேற்று நடந்தது. கூட்டம் மாவட்ட பஞ்., தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் நாகராஜ் முன்னிலை வகித் தார். செயலர் சுவாமிநாதன் வரவேற்றார்.
சக்தி (6வது வார்டு): அத்திப்பட்டு, வேகாமங்கலம்,மாமண்டூர்,களத்தூர், சங்கரன்பாடி போன்ற கிராமங்களின் பயன்பாட்டில் இருந்த மயான பூமிகள் பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லபட்டுள்ளது. அவற்றை சீரமைக்க வேண்டும்.
அம்பிகா (2வது வார்டு): தணிகை போளூரில் அரசு ஆரம்ப சுகாதார ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும். பெருங்களத்தூர், வளர்புரத்தில் அங்கன்வாடி கட்டடம் கட்ட வேண்டும்.
பவித்ரா ( 3வது வார்டு ) : மழையால் சேதமடைந்த கிராமப்புற சாலைகளை சீரமைக்க வேண்டும். பள்ளி அருகில் உள்ள கடைகளை கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் கஞ்சா, குட்கா பொதுமக்கள் புகார் தெரி விக்கின்றனர். இவற்றை முற்றிலும் ஒழிக்க எஸ்.பி.யிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டும். பஸ் ஸ்டாப், பள்ளி வளாகங்களை மது அருந்தும் கூடங்களாக பயன்படுத் துவதை தடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டம் காலை 8 மணிக்கு தொடங்குவதால் பெண்கள் வீட்டு வேலை, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப சிரமப்படுகின்றனர். ஆகவே 100 நாள் திட்ட வேலைகளை காலை 9லிருந்து 10 மணிக்கு துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்:உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு முடிந்த வரை நிறைவேற்றப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் மங்கையர்க் கரசி, சுந்தராம்பாள், கிருஷ்ணமூர்த்தி, செல்வம், மாலதி, காந்திமதி, தனராஜ், சிவகுமார், மேலாளர் ராஜா, உமாபதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.