முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாக இருந்து வந்தார்

அவரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துத் தேடிவந்த நிலையில், அவர் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வரும் 6ஆம் தேதி ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Breaking: Ex-Minister Rajendra Balaji has been arrested in Karnataka