கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை 73வது குடியரசு தின விழா ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், கலெக்டர் பாஸ்கர பாண் டியன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றிவைத்து காவலர் அணி வகுப்பு மரியாதையை வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.. தொடர்ந்து, அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், காவலர்கள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு சேவையாற்றிய டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுகிறார்.

தொடர்ந்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்பிக்கின்றார்.

இந்நிலையில், ராணிப் பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து கலை நிகழ்ச்சிகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிகளவில் கூட்டம் கூடுவதை தடுக்கும் விதமாக விழாயும் மைதானத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இவ்விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் வரவழைக்கப்படுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் வீடு தேடிச் சென்று சால்வை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். விழாவில் கலந்துகொள்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும். விழா மைதானத்திற்கு வரும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கு உடல் வெப்பபரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் குடியரசு தின விழாவில் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.