ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக பட்சமாக கலவையில் 58.4 மி.மீ மழை பதிவானது.
வடகிழக்கு பருவ மழை தீவிரத்தால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த மழை பொழிவு காணப்பட்டது.
தொடர் மழை காரணமாக பாலாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பாலாற்றில் பெருக் கெடுத்து ஓடிய மழைநீர் வெள்ளமானது மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு திருப்பிவிடப்பட்டது.
இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஏரிகள் தற்போது அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது.
வடகிழக்கு பருவ மழை கடந்த ஒரு வார காலமாக ஓய்ந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென்று பலத்த மழை கொட்டியது. மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கனமழையானது நேற்று காலை வரை நீடித்தது.
இதனால் பாலாற்றில் மீண்டும் மழைநீர் வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல், ஏரிநீர் வரத்து கால்வாய்கள். சிற்றோடைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் அதிகபட்சமாக 58.4 மி.மீ. மழை பதிவானது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு (மி. மீட்டரில்)
- அரக்கோணம்- 18.2.
- ஆற்காடு-19.6.
- காவேரிப் பாக்கம்- 5,
- வாலாஜா-28.5.
- அம்மூர்-8.8,
- சோளிங்கர் 6.