வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், கொரோனா என பல்வேறு பிரச்சினைகள் இந்தியாவில் சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்று நடுத்தர வர்க்கத்தினரை கடுமையாக பாதித்துள்ளன. இதற்கிடையே கொரோனா மூன்றாம் அலையும் தொடங்கிவிட்டது.
இந்தியாவில் சம்பளம் பெறும் ஊழியர்கள் பெரும்பாலும் மிடில் கிளாஸை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், சம்பளம் பெறும் ஊழியர்கள் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை எதிர்பார்ப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, வருமான வரி அடிப்படை விலக்கு வரம்பு கடந்த சில ஆண்டுகளாக மாற்றப்படாமலேயே உள்ளது. தற்போது வருமான வரி அடிப்படை விலக்கு வரம்பு 2.5 லட்சம் ரூபாயாக உள்ளது. எனவே அடிப்படை விலக்கு வரம்பை உயர்த்த வேண்டுமென்பது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

பட்ஜெட் தாக்கல் டைமிங்.. வெளியான முக்கிய அப்டேட்! வரிச் சுமையில் இருந்தும் நிவாரணம் வேண்டுமென்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. பட்ஜெட் தொடர்பாக அசோசம் அமைப்பு நடத்திய ஆய்வில் 40 விழுக்காட்டினர் வருமான வரி சுமையை குறைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், ஏழை மக்களுக்கு ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ (Direct Benefit Transfer) திட்டம் மூலம் நிதியுதவி வழங்கலாம் எனவும் 31 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். இதுபோக, ஜிஎஸ்டியில் பெட்ரோல், டீசலை கொண்டுவந்து விலை உயர்வில் இருந்து நிவாரணம் அளிக்க வேண்டுமெனவும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Budget 2022 Ethirparpugal !