காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆயர்பாடி ஊராட்சி. இந்த பகுதியில் உள்ள ஒரு 7 வயது சிறுவனுக்கு கடந்த 12ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதனால் பெற்றோர்கள் குழந்தையை ராணிப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுவனுக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெங்கு பாதிப்பு ஏற்பட்ட பகுதியில். ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி கோவிந்தன், தலைமையில் ஒட்டு மொத்த தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் பிளிசிங் பவுடர் மற்றும் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து வீடு வீடாக சென்று அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்தனர். அப்போது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ். சுகாதார ஆய்வாளர் குமார், விஏஓ பாலாஜி, துணை தலைவர் சீத்தாமணி உட்பட பலர் உடன் இருந்தனர்.