குறள் : 644
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில்
மு.வ உரை :
சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும் அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.
கலைஞர் உரை :
காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை :
எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.
Kural 644
Thiranarindhu Solluka Sollai Aranum
Porulum Adhaninooungu Il
Explanation :
Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it there is neither virtue nor wealth.
இன்றைய பஞ்சாங்கம்
27-01-2022, தை 14, வியாழக்கிழமை, தசமி திதி பின்இரவு 02.16 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. விசாகம் நட்சத்திரம் காலை 08.51 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 27.01.2022 Today rasi palan - 27.01.2022
மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது சிறப்பு. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.
ரிஷபம்
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளுடன் இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் குறையும்.
மிதுனம்
இன்று பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
சிம்மம்
இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையை தரும்.
கன்னி
இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
துலாம்
இன்று உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவு சீராகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
விருச்சிகம்
இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் நிலை சீராகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
தனுசு
இன்று உடல் நிலையில் சிறு உபாதைகள் உண்டாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவி கிட்டும்.
மகரம்
இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,