திருவள்ளூர் மாவட்டம் செஞ்சி பானம்பாக்கத்தை சேர்ந்தவர் கிருபாகரன் (50), கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை 7.30 மணிக்கு செஞ்சிபானம்பாக்கத்தை ரயில்வே ஸ்டே ஷன் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்தார். இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் அங்கு சென்று கிருபாகரனின் உடலை மீட்டு பிரேதபரி சோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சென்னையில் இருந்து பெங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பகல் 2.30 மணிக்கு செஞ்சிபானம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் வரும் போது ரயிலில் இருந்து தவறி விழுந்து 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்துவிட்டதாக பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சப்இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் அங்கு சென்று அடையாளம் தெரியாதவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தார்.  

போலீசார் வழக்குப்ப திவு செய்து அடையாளம் தெரியாதவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தண்டவாளத்தை கடந்துச் செல்ல முயன்றவர் ரயில் மோதி இறந்தாரா? என விசாரித்து வருகின்றனர்.