மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் வேலூர் விஐடி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்தின் சார்பில் விஐடி முதலாம் ஆண்டு மாணவி பூர்ணாஸ்ரீ 71கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் அடுத்த மாதம் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு பூர்ணாஸ்ரீ தகுதி பெற்றுள்ளார்.

அதேபோல் தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் வேலூர் மாவட்டத்தின் சார்பில் விஐடி முதலாம் ஆண்டு மாணவி தேவதர்ஷினி 48 முதல் 51 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதுடன் 50 ஆயிரம் பரிசுத் தொகையும் பெற்றுள்ளார்.

மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவிகள் பூர்ணாஸ்ரீ மற்றும் தேவதர்ஷினி ஆகிய மாணவிகளை விஐடி வேந்தர் விசுவநாதன் துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன். சேகர் விசுவநாதன். ஜி.வி. செல்வம். துணைவேந்தர் ராம் பாபு கோடாளி, இணை துணை வேந்தர் நாராயணன். பதிவாளர் சத்ய நாராயணன், உடற்கல்வி இயக்குனர் தியாகசந்தன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

மேற்கண்ட மாணவிகள் விஐடியில் விளையாட்டு ஒதுக்கீடு பிரிவில் சேர்க்கை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Vellore VIT student wins gold medal in state level weightlifting competition