ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வருபவர் செல்வகுமார். ராணிப்பேட்டையை அடுத்த லாலாபேட்டையில் உள்ள அவரது வீட்டில், லஞ்சஒழிப்புப் போலீஸார், கடந்த 6ஆம் தேதி சுமார் 15 மணி நேரம் சோதனை செய்தனர்
சோதனையில் ரூ 23.5 லட்சம் ரொக்கம், ரூ,10.75 லட்சம் வரைவோலை ஆகிய கணக்கில் வராதவைகள் மற்றும் , 193 சவரன் தங்க நகை, 2.17 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கு
பின்பு, லஞ்ச ஒழிப்பு போலீஸார், பொறியாளர் செல்வகுமார் , அவர் மனைவி சிவசங்கரி ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரின் 9 வங்கி கணக்குகளை முடக்கி விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்குத்தொடர்பாக செல்வகுமார் ,முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.