பேருந்து புதிய வழித்தடங்களை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் காந்தி
இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை முத்துக்கடைப் பேருந்துநிலையத்தில், இராணிப்பேட்டையிலிருந்து முதன் முதலாகப் புதியவழித்தடங்களில் பேருந்துகள்இயக்கும் துவக்கவிழா நடந்தது.

விழாவிற்கு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன். தலைமைத்தாங்கினார் அரக்கோணம்எம்பி ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார். எஸ்பி தீபாசத்தியன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அமைச்சர் காந்தி பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசுகையில், கடந்த ஆட்சிகாலத்தில் புதியவழித் தடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் பேருந்துகள் இயங்கவில்லை

ஆனால் கடந்த வாரம் தான் இதுகுறித்த கோரிக்கைகள் வைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. அவை, இன்று ஒரேநாளில் 18வழித் தடங்களில் பேருந்து இயக்கம் தொடங்கியுள்ளது. என்று இவ்வாறு அவர்பேசினார்.

தடம் எண்;123/Kசென்னை, தடம்எண்:444/U,பெங்களூரு மற்றும் சிப்காட் அடுத்ததடம் எண்:307/A பெல்லிலிருந்து திருச்சி ஆகிய வழித்தடங்களில் மூன்று ஊர்களுக்கு முதன்முதலாகப் புறநகர் பேருந்துகள் மற்றும் ஆற்காட்டிலிருந்து தடம்எண்: T22/A, திருப்பாற்கடல், T,7/D,நாராயணகுப்பம், T,11/A,மலைமேடு வழியாகப் பொன்னை ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயங்கத்தொடங்கியது

துவக்கவிழாவில் போக்குவரத்துக் கழகப்பொதுமேலாளர்,துணைமேலாளர்,மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயந்தி, ஒன்றயக்குழுத் தலைவர்கள் வெங்கடரமணன்,நிர்மலா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.