மார்கழி மாதம் 30 நாளும் பெண்கள் வீட்டில் தவறாமல் இந்த ஒரு விஷயத்தை கடைபிடித்தால் போதும். நீங்கள் வைத்த வேண்டுதல் மார்கழி மாதம் முடிவதற்குள் பலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பெண்களுக்கு இறைவனிடம் வைப்பதற்கு நிறைய வேண்டுதல் இருக்கும். பெண்களுடைய மனதில் வைத்திருக்கும் வேண்டுதலை அவ்வளவு சுலபமாக ஒன்று இரண்டு என்று பட்டியலிட்டு சொல்லிவிட முடியாது. ஆனால் உங்கள் வேண்டுதல் பட்டியலில் இருக்கும், ஒரே ஒரு வேண்டுதலை மட்டும் இந்த மார்கழி மாதம் முடிவதற்குள் நிறைவேற வேண்டும் என்று ஆண்டவனை இந்த முறையில் பிரார்த்தனை செய்து கொண்டால், நிச்சயமாக, மார்கழி மாதம் முடிவதற்குள் உங்களுடைய பிரார்த்தனை நிறைவேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அப்படி இல்லை என்றாலும் தை பிறக்கும் போது உங்கள் வேண்டுதலுக்கான வழியும் நிச்சயம் பிறக்கும்.

எடுத்துக்காட்டிற்கு வீட்டில் இருக்கும் அம்மா தன்னுடைய குழந்தைக்கு திருமணம் ஆக வேண்டும் என்று வேண்டுதல் வைத்திருப்பார்கள். வீட்டில் தன் மகனுக்கோ மகளுக்கோ நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். தன் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தன் குடும்பம் செல்வ செழிப்புடன் வளமாக வாழ வேண்டும் என்ற வேண்டுதலும் இருக்கும். சில பேருக்கு சொந்த வீடு வாங்க வேண்டும். சொந்த இடம் வாங்க வேண்டும். தங்க நகை வாங்க வேண்டும் என்ற வேண்டுதலும் இருக்கும். எப்படிப்பட்ட வேண்டுதலாக இருந்தாலும் சரி, பின் சொல்லக்கூடிய வழிபாட்டு முறையை இந்த மார்கழி மாத முப்பது நாட்களிலும் செய்து வந்தாலே போதும்.

மார்கழி மாதத்தில் சுலபமான முறையில் இறைவனிடம் வேண்டுதல் வைப்பது எப்படி. பெண்கள் காலையிலேயே எழுந்து முதலில் சுத்தபத்தமாக குளித்து விட வேண்டும். உங்கள் வீடு சுத்தமாக இருக்கும் பட்சத்தில் அசைவம் சாப்பிடாமல், மற்ற திட்டுக்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் தினமும் தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மேல்மட்டும் குளித்தால் கூட போதும். குளித்தபின்பு வாசல் தெளித்து கோலம் போட வேண்டும்.

கோலத்தின் மேல் முடிந்தால் பசுஞ்சாணம், பூசணிப்பூ வைப்பது வழக்கம். முடியாதவர்கள் மஞ்சளை தண்ணீரில் பிசைந்து வைத்து, அதன் மேல் செம்பருத்திப் பூ அல்லது சாமந்திப் பூ, வைத்தாலும் தவறு கிடையாது. எங்கள் வீட்டில் கோலம் போட்டு அதன் மேல் பூ வைப்பதற்கே வசதி இல்லை என்று சொல்லுபவர்கள் ஆக இருந்தாலும் சரி, சிறிய கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சாமந்திப்பூ வையும் செம்பருத்திப் பூவையும் மிதக்க வைத்து நிலை வாசலுக்கு வெளியில் வைத்தாலும் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். செம்பருத்தி பூ சூரியனுக்கு உகந்த மலராக சொல்லப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக பூஜை அறைக்கு சென்று சுவாமி படங்களுக்கு கிடைத்த பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, ஒரு தீபம் ஏற்றி வைத்து விட்டு, கட்டாயமாக ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். ஒரு வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, மஞ்சள் பிள்ளையாருக்கு இரண்டு அருகம்புல் வைத்து குங்குமப் பொட்டு வைத்து, பூஜை அறையில் வைக்க வேண்டும்.

அதன்பின்பு உங்களுடைய வேண்டுதல் என்னவோ ஒரே ஒரு வேண்டுதலை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு அந்த வேண்டுதலை நிறைவேற்றி தரும்படி குலதெய்வத்தையும், விநாயகரையும் அம்பாளிடமும் மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இறுதியாக இறைவனுக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளவேண்டும். இந்த பூஜைக்காக 2 கற்கண்டுகள் நிவேதனமாக வைத்தாலும் போதுமானது. தினமும் மஞ்சள் பிள்ளையாரை புதியதாகத் தான் பிடித்து வைக்க வேண்டும். பழைய மஞ்சள் பிள்ளையாரை தண்ணீரில் கரைத்து விடலாம். பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் இந்த பூஜை செய்வதை நிறுத்திவிட்டு மீண்டும் அடுத்த நாள் பூஜையை எப்போதும்போல தொடரலாம்.

இந்த பூஜையில் மிக மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். இந்த எல்லா வேலைகளையும் நீங்கள் காலை 6.00 மணிக்கு முன்பாக முடித்திருக்க வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பு உங்களுடைய வேண்டுதலை இந்த மார்கழி மாதத்தில் இறைவனிடம் மானசீகமாக ஆத்மார்த்தமாக வைக்கும் பட்சத்தில் அந்த வேண்டுதல் நிறைவேறாமல் போவதற்கு வாய்ப்பே கிடையாது. இந்த மார்கழி மாதத்திற்குள் நிச்சயமாக உங்களுடைய வேண்டுதலை அந்த ஆண்டவன் நிறைவேற்றி வைப்பான்.