பதவியேற்று 10 நாட்கள் ஆன நிலையிலும் எங்களின் அதிகாரங்கள், செயல்பாடுகள் குறித்து முறையாக பிடிஓகள் தெரிவிக் காததால் வெறும் கையில் முழம் போடும் நிலையில் இருப்பதாக கிராம பஞ்., தலைவர்கள் மனம் குமுறுகின்றனர்.
தமிழகத்தில் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பிரச்னைகளால் ஊரக உள்ளாட்சி தேர்தல் ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கடந்த மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. கடந்த மாதம் 20ம் தேதி கிராம பஞ்., தலைவர்கள் பதவியேற்றனர். 22ம் தேதி துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டத் தில் 288 கிராம பஞ்., தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கிராம பஞ்., தலைவர், துணை தலைவர்கள் முறையாக பதவி யேற்று 10 நாட்கள் ஆன நிலையிலும், அவர்களுக்கான அதிகாரங்கள், செயல்பாடுகள் குறித்து அந்தந்த பிடிஓகள் முறையாக தகவல் தெரிவிக்காமல் உள்ளனர்.

தேர்தல் தேதி அறிவித்த பிறகு பஞ்., செயலாளர்கள் கணக்கு வழக்குகளை முடித்து பஞ்., தலைவர்கள் பதவியேற்ற சில நாட்களில் ஒப்படைத்திருக்கலாம். இத்தனை நாட்களாக காலம் தாழ்த்துவது பலவித சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

அதிகாரம், செயல்பாடுகள்... இதுகுறித்து கிராம பஞ்., தலைவர்கள் கூறியதாவது:

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு பஞ்.,ல் என்னென்ன பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் செய்வதற்கு எந்த நிதியில் செலவினம் செய்வது, தெருவிளக்குகள், குடி நீர் பிரச்னைகள் கையாள்வதற்கான நிதியை செலவிடுவது, தங்களது பஞ்.,க்கு எந்த வங்கியில் கணக்கு பராமரிக்கப்படுகிறது உள்ளிட்ட பல விவரங்கள் தெரியாமல் உள்ளது. பஞ்., செயலாளரிடம் கேட்டாலும் முறையான பதில் - அளிப்பதில்லை.

முறையான தகவல் இல்லாத தால் தங்களது சொந்த பணத்தை செலவழித்து வருகிறோம். வசதியில்லாத இல்லாத பஞ்., தலைவர்கள் வெறும் கையில் முழம் போட்டு வருகின்றனர். குறிப்பாக அடிப்படை வசதிகள் குறித்து தலைவரிடம் கேட்கும்போது இதோ, அதோவென்று காரணம் சொல்லி வசதிகளை செய்து தர முடியாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் என்றனர்.

செக் புக் தராதது ஏன்? ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:

பட்டா பிரச்னை தொடர்பான முகாம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை, கரோனா தடுப் பூசி முகாம் நடத்துவது குறித்து பஞ்., தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளோம். இன் னும் சில நாட்களில் பஞ்., தலை வர்களின் அதிகாரங்கள், பதிவேடுகள் கையாள்வது குறித்து - கிருஷ்ணகிரியில் பயிற்சி முகாம்ல் நடத்தப்படவுள்ளது.

பஞ்.,ல் 31 வகையான பதி த வேடுகள் பராமரிக்கப்படுகிறது. 2016ல் இருந்து தனி அலுவலரிடம் அதிகாரம் இருந்ததால் இது நாள் வரையில் செய்த செலவினத்துக்கு பில் வைப்பது, பஞ்.,க்கு சொந்தமாக என்னென்ன சொத்து உள்ளது என்பதை தயார் செய்து வருகிறோம். தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து பத்து பைசா கூட தனி அலுவலர் கள் செலவு செய்யவில்லை.

இன்னும் சில தினங்களில் பஞ்., தலைவர்களிடம் அதிகா ரங்களை வழங்கிவிடுவோம். மேலும் அடிப்படை வசதிகள் செய்தாலும் அதற்குண்டான பில் வைத்து நிதி ஒதுக்கீடு வரும் போது பணத்தை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

பெரும்பாலான பஞ்., தலைவர்கள் தங்களுக்கு என்ன அதி காரம் என்று கேட்பதில்லை. இன்னும் ஏன் செக் புத்தகம் எங்களிடம் தரவில்லை என்றே கேட்கின்றனர். அதிகாரங்கள், செயல்பாடுகள் உள்ளிட்ட எல்லா விவரத்தையும் இன்னும் சில தினங்களில் பஞ்., தலைவர்களிடம் கொடுத்துவிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.