சோளிங்கர் அடுத்த மோட்டூரில் கால்வாய் கட்ட தோண்டப்பட்ட பள்ளம் நீண்ட நாட்களாக மூடப்படாததால் அந்தபள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த லாரி

Sholingur: Truck overturned in the ditch and driver got injured
சோளிங்கர் அடுத்த மோட்டூரில் கால்வாய் அமைக்கப்பட்டு இரு புறமும் சிமென்ட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக தோண்டப்பட்ட பள்ளம் நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது.

கடந்த மாதம் 25ம் தேதி அங்குள்ள திருவாத்தம்மன் கோயில் அருகே கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டதால் அதன் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் அந்த பள்ளத்தில் சாய்ந்தது.

அதனால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. மேலும் அந்த நேரத்தில் மழை பெய்ததால், மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்பட வில்லை. அந்த இடத்தின் அருகிலேயே நேற்று மண் ஏற்றிவந்த லாரி, கால்வாய் கட்ட தோண்டப்பட்ட பள்ளம் மூடாததால் அதில் சிக்கி சுவிழ்ந்தது. 
இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் படுகாயம டைந்தார். 

அருகில் உள்ளோர் அவரை மீட்டு சோளிங்கரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் நீண்ட நாட்களாக மூடாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அப்பகுதி மக்கள் நலன் சுருதி கால்வாய் கட்ட தோண்டப் பட்ட பள்ளம் கால்வாய் அமைக்கும் பணி முடிந்தும் மூடாமல் உள்ளது. அந்த பள்ளத்தை மூட வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.