👉 1982ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வினோபா பாவே மறைந்தார்.

👉 2000ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி இந்தியாவில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.

👉 1959ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முகிலறையை (Wilson cloud chamber) கண்டுபிடித்த சார்லஸ் தாம்சன் ரீஸ் வில்சன் மறைந்தார்.

👉 1971ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி இன்டெல் நிறுவனம் உலகின் வர்த்தக ரீதியிலான முதலாவது 4004 என்ற சிங்குள் சிப் Microprocessor-ஐ வெளியிட்டது.


பிறந்த நாள் :-

சானியா மிர்சா
🌹 இந்திய டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா 1986ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் பிறந்தார். சானியா மிர்சா தனது சிறு வயதிலிருந்தே டென்னிஸ் விளையாடத் தொடங்கினார்.

🌹 இவர் 2003ஆம் ஆண்டுமுதல் மகளிர் டென்னிஸ் சங்கத்தால் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார். 2004ஆம் ஆண்டு இவருக்கு இந்திய அரசால் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

🌹 ஏப்ரல் 2015ஆம் ஆண்டு பேமிலி கோப்பை டென்னிஸ் போட்டியில் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து இரட்டையர் பட்டத்தை வென்றதை அடுத்து இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றார்.

🌹 2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் மற்றும் 2012ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் மகேஷ் பூபதியுடன் இணைந்தும்' 2014ஆம் ஆண்டு அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பிரேசிலின் புருனோ சோரெஸ்டன் இணைந்தும் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்