குறள் : 559

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

மு.வ உரை :

அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால் அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

கலைஞர் உரை :

முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது.

சாலமன் பாப்பையா உரை :

ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.

Kural 559

Muraikoti Mannavan Seyyin Uraikoti
Ollaadhu Vaanam Peyal

Explanation :

If the king acts contrary to justice rain will become unseasonable and the heavens will withhold their showers.

இன்றைய பஞ்சாங்கம்

03-11-2021, ஐப்பசி 17, புதன்கிழமை, திரியோதசி திதி காலை 09.02 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 06.03 வரை பின்பு அமாவாசை. அஸ்தம் நட்சத்திரம் காலை 09.58 வரை பின்பு சித்திரை. மரணயோகம் காலை 09.58 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. 

இராகு காலம்

 மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

இன்றைய ராசிப்பலன் - 03.11.2021

மேஷம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.

ரிஷபம்

இன்று பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் வாங்குவதை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிட்டும்.

கடகம்

இன்று வேலையில் உங்கள் செயல்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்து லாபத்தை அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறப்புக்கள் உதவியாக இருப்பார்கள். ஆரோக்கிய பாதிப்புகள் சீராகும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். கடன் பிரச்சினை தீரும்.


துலாம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களால் அ-னுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மகரம்

இன்று குடும்பத்தில் அமைதி குறையும். கூடுதல் பணிச்சுமையால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கவனம் தேவை. திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன்கள் குறையும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்

இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை. 

மீனம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,