பாசஞ்ஜர் ரயில்

ராணிப்பேட்டை சிப்காட் ராமகிருஷ்ணா பெல் பள்ளியில் அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் அரக்கோணத்திலிருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை வந்து செல்லும் பாசஞ்ஜர் ரயிலில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம்.

பஸ்ஸில் பயணம்

இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக இந்த ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது கரோனா பரவல் குறைந்து ஊரடங்கும் தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மீண்டும் இயக்கப்படாததால் அரக்கோணம் மாணவர்கள் பள்ளிக்கு பஸ்ஸில் வந்து செல்கின்றனர். இது மிகவும் சிரமமாக உள்ளது.

மாணவர்கள் மனு

ஆகவே நிறுத்திய ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரி மாணவர்கள் நேற்று தங்களது பள்ளிக்கு அருகில் உள்ள முகுந்தராயபுரம் ரயில் நிலைய அலுவலரிடம் மனு அளித்தனர்.

ரயில் மறியல், வதந்தி

இந்நிலையில் மாணவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக யாரோ வதந்தி பரப்பியதால் முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் மாணவர்கள் அப்படி எதுவும் செய்ய வில்லை. மனு கொடுத்து விட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.