உடல் உறுப்புகள் தானம் செய்வதில் உலக அளவில் இந்தியா 3வது இடம் வகிப்பதாக மத்திய மருத்துவ துறை அமைச்சர் மன்சுக் மாண் டவியா கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:

உலக நாடுகளிலேயே, உடல் உறுப்புகள் தானம் செய்வதிலும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதிலும் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 3வது இடத்தில் உள்ளது. 2013ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம், ஆயிரத்து 990 ஆக இருந் தது. அது 2019ம் ஆண்டு 12 ஆயிரத்து 746 ஆக உயர்ந்துள்ளது. இது பெருமைக்குரியதாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.

கரோனா பேரிடர் காலத்தில் உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் பெரியளவில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது.

இது விரைவில் சீராகும் என்று நம்புகிறேன், இவ்வாறு அவர் கூறினார்.