ராணிப்பேட்டை மாவட் டத்தில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு பிரிவில் பணி புரியும் சப்இன்ஸ்பெக்டர்கள் உட்பட 47 போலீசாரை நிர்வாக வசதி காரணமாக இட மாற்றம் செய்து எஸ்பி தீபா சத்யன் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மதுவிலக்கு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்த சித்ரா, வாலாஜா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்ட ராகவும், ஆற்காடு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார். ராணிப்பேட்டை மதுவிலக்கு பிரிவுக்கும், காவேரிப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்சக்ரவர்த்தி, அரக்கோணம் மதுவிலக்கு பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அதேபோல் ராணிப்பேட்டை, அரக்கோணத்தில் மதுவிலக்கு பிரிவில் பணிபுரிந்து வந்த தலா 10 போலீசார், சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். 

மேலும், அரக்கோணம், ராணிப்பேட்டை, வாலாஜா.சோளிங்கர், சிப்காட், வாழப்பந்தல்.பாணாவரம், அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த 25 போலீசார், மதுவிலக்கு பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 47 போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.