ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும். என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழையொட்டி தமிழகத்தின் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் மழைபெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையானது கொட்டித்தீர்த்தது. மொத்தம் உள்ள 369 ஏரிகளில் 191 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி முழுமையாக நிரம்பி கடைவாசல் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 32 ஏரிகள் 75 சதவீதமும், 38 ஏரிகள் 50 சதவீதமும், 72 ஏரிகள் 25 சதவீதமும், 35 ஏரிகள் 25 சதவீதத்திற்கு குறைவாகவும் நிரம்பிவருகிறது. முழு கொள்ளளவை எட்டிய ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரானது வயல் வெளிகளில் தேங்கியதால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, நிலக்கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் மிகவும் சேதமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த பயிர்களை கணக் கீடு செய்து உரிய முறையில் இழப்பீடு வழங்கப்படும். என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், வடகிழக்கு பருவமழையால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகள் இழப்பீட்டு தொகைக்கு இ-சேவை மூலமாக விண்ணப்பிக்கலாம், என்று தெரிவித்திருந்தார். இதற்கான கால அவகாசம் இம்மாதம் 15ம் தேதி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாகவும். சேதமடைந்த பயிர்களை முழுமையாக கணக்கீடு செய்யும் வகையிலும். பயிர் இழப்பீடு தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுதொ டர்பாக விவசாயிகள் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையானது கொட்டித்தீர்த்தது. மழைநீர் வெள்ளம் காரணமாக நெல், நிலக்கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் என சுமார் 710 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டவை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தது. தொடர் மழையால், சேதமடைந்த பயிர்கள் முழுமையாக கணக்கீடு செய்தல் போன்ற காரணங்களுக்காக பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப் பீடுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் இறுதி வரை விவசாயிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க வேண்டும். என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.