"பாரத பிரதமரின் ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தில்,அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு எண்ணை செக்கு மூலம் கடலை எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லெண்ணை தயாரித்து சந்தைப்படுத்த 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
நாடு முழுமையும் கரோனா தாக்குதலால் பாதிக்கப்பட்ட நிலையில் இத்திட்டம் சிறு, குறு நிறு வனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தின் மூலம் புதியதாக எண்ணை செக்கு அளகு அமைக்க ஆர்வமாக உள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் எண்ணை செக்கு வைத்திருக்கும் தொழில் முனைவோர்கள் பயன் பெற வாய்ப்பு உள்ளது. மேலும் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஏற்கனவே ஈடுபட்ட பிற உணவு பதப்படுத்தும் நிறுவனங்களும் தங்களின் விரிவாக்கத்திற்கு இத்திட்டத்தில் பயன்பெறலாம். அவ்வாறு இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் தாங்கள் வாங்க இருக்கும் இயந்திரங்களின் ஜி.எஸ்.டி.யுடன் கூடிய விலைப்புள்ளி மற்றும் திட்ட அறிக்கை தயார் செய்து ராணிப்பேட்டை மாவட்டவேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகத் தில் விண்ணப்பிக்கலாம்.
தொழில் முனைவோர் இத்திட்டத்தின் கீழ் திட்டத்தொகையில் 10 சதவீதத்தை தங்களின் பங்கு தொகையாக செலுத்திட வேண்டும். திட்ட தொகையில் 90 சதவீதம் வங்கியின் மூலமாக கடனுதவியாக வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் கடன் தொகையில் 35 சதவீதம் மானியமாக வழங்கப்படும். எனவே தொழில் முனை வோர் இத்திட்டத்தினை பெருமளவு பெற்று பயன டையலாம்.

விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக் குநரை (வேளாண் வணிகம்) 9751016200 எனும் எண்ணிலும், வேளாண்மை அலு வலரை (வேளண்வணிகம்) 7598102824 எனும் எண்ணிலும் தொடர்பு கெள்ளவும் என ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.