வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கார்னாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் 46 வயது உடைய சசிகுமார். இவரது மனைவி மணிமேகலை. 13 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி காலை சுமார் 11 மணியளவில் வீட்டிலிருந்து மணிமேகலை வெளியே சென்றுள்ளார்.

இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மனைவியை சசிகுமார் உறவினர்கள் நண்பர்கள் என பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார்.

எங்கு தேடியும் கிடைக்காததால் சசிகுமார் மனைவி காணாமல் போனது குறித்து அக்டோபர் 3ஆம் தேதி காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காட்பாடி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பரமசிவம் வழக்குப் பதிந்து காணாமல் போன பெண் குறித்து விசாரணை மேற்கொண்டார்.