வாலாஜா நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த டெங்கு ஒழிப்பு தற்காலிக பணியாளர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி பணியிலிருந்து நீக்கி விட்டு நான்கு மாத சம்பளத்தை வழங்காத வாலாஜா நகராட்சி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது

வாலாஜா நகராட்சியில் டெங்கு ஒழிப்பு தற்காலிக பணியாளர்களாக 50க்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்துள்ளனர்

இந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக டெங்கு ஒழிப்பு தற்காலிக பணி செய்து வந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட நபர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி பணியில் இருந்து நீக்கியுள்ளனர் மேலும் அவர்கள் பணியாற்றிய நான்கு மாத காலம் ஊதியத்தையும் வழங்காமல் காலதாமதம் ஏற்படுத்தியுள்ளனர்

தற்போது வாலாஜா நகராட்சியில் புதிய நபர்களுக்கு டெங்கு ஒழிப்பு தற்காலிக பணியினை வழங்கப்பட்டு வருவதால் 10 ஆண்டுகாலம் எவ்வித எதிர்பார்ப்புமின்றி கொரோனா பேரிடர் காலங்களிலும் பணியாற்றி வந்த தங்களுக்கு பணியினை நீடித்து தர வேண்டும் என கோரியும் டெங்கு ஒழிப்பு தற்காலிக பணியாளர்கள் வாலாஜா நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர் ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த வாலாஜா நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி மற்றும் ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் ஆகிய அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படாது எனவும் அவர்களுக்கு வழங்க வேண்டிய நான்கு மாத சம்பளம் நிதி நெருக்கடி காரணமாக வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்

இதனால் அதிர்ச்சி அடைந்த டெங்கு ஒழிப்பு தற்காலிக பணியாளர்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தங்களுக்கு வழங்க வேண்டிய நான்கு மாத சம்பளம் மற்றும் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரி மனுவினை வழங்கியுள்ளனர்