🌸 1958ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பூமியில் வீழ்ந்து எரிந்தது.

🌸 1968ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி நாசா முதல் தடவையாக மூன்று விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது.

🌸 1908ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி திரைப்பட நடிகை கே.பி.சுந்தராம்பாள் பிறந்தார்.


முக்கிய தினம் :-

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 
🍀 பெண் சிசுவை பிறக்க விடக்கூடாது என்னும் பழமையான கண்ணோட்டத்திற்கு நவீன கண்டுபிடிப்பு கருவியும் துணைப்போவது தான் துயரம். தப்பி தவறி பிறக்கும் பெண் குழந்தைகளும் ஒவ்வொரு கட்டத்திலும் தப்பிப் பிழைத்து வளர்ந்து, வாழ்ந்து மறைய வேண்டியிருக்கிறது.

🍀 உடை, படிப்பு, விளையாட்டுப் பொருள் என ஒவ்வொரு விஷயத்திலும் புறக்கணிப்பை சந்திக்கும் பெண் குழந்தைகள் இளமையிலிருந்தே ஒவ்வொரு தடைகளையும் கடந்து தான் வளர்கிறார்கள்.

🍀 பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011ஆம் ஆண்டு ஐ.நா. சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.


பிறந்த நாள் :-


சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 

🌹 புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், மறுமலர்ச்சி கவிஞருமான சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 1826ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள குளத்தூரில் பிறந்தார்.

🌹 இவர் மாயூரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணிபுரிந்ததால், மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துகள் ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன.

🌹 தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துகள் அனைத்தையும் தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கடுமையாக எதிர்த்தார்.

🌹 தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சி கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 62வது வயதில் (1889) மறைந்தார்.


ஹென்ரிச் வில்லெம் ஒல்பெர்ஸ்

🌷 தற்காலப் பேரண்டவியல் கருத்துகளுக்கு முன்னோடியாக அரிய சிந்தனையை எழுப்பிய ஜெர்மானிய மருத்துவர், வானவியலாளர் ஹென்ரிச் வில்லெம் ஒல்பெர்ஸ் 1758ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி பிறந்தார்.

🌷 வால் நட்சத்திரம் மற்றும் வால் நட்சத்திரங்கள் செல்லும் பாதைகளை கணிக்கும்முறையை கண்டறிந்தவர். சிறுகோள் பாறைகளான பல்லாஸ், வெஸ்டா ஆகியவற்றை கண்டறிந்தவர்.

🌷 வானவியலில் பேரார்வம் கொண்டிருந்த இவர் 1840ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி மறைந்தார்.