ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்ராணிப்பேட்டை அருகே பைக் மீது அரசு பேருந்து மோதியது


பைக் மீது மோதிய அரசு பேருந்துராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த நரசிங்கபுரம் இணைப்பு சாலையில் வந்த இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற களத்தூர் பகுதியை சேர்ந்த பரசுராமன், கனகவல்லி ஆகியோருக்கு தலை மற்றும் கை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

பைக்கில் சென்ற இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி


காயமடைந்தவர்களை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில் விபத்து குறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.