ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த திருமலைச்சேரி கோட்டையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிகிருஷ்ணன் விவசாயியான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்
இதில் அவரது இளைய மகன் நாகராஜன் -38 வாலாஜாவில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்ததால் அவருடைய அண்ணன் வீட்டிலேயே தங்கிவந்துள்ளனர்
இந்த நிலையில் இவர் நேற்று அவர் வேலை பார்க்கும் மெக்கானிக் கடைக்கு ஆயுதபூஜை போடுவதாக காலை 7. 00 மணி அளவில் வீட்டில் கூறி விட்டு வாலாஜாவிற்கு சென்றிருக்கிறார்
பிறகு மாலை வெகு நேரம் ஆகியும் நாகராஜன் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் வாலாஜாவில் அவர் வேலை செய்யும் மெக்கானிக் கடை மற்றும் அக்கம் பக்கத்தில் தேடி வந்துள்ளனர்
இந்நிலையில் 15-10-2021 மதியம் சுமார் 12. 00 மணி அளவில் தேவதானம் அருகே உள்ள தாங்கல் ஏரியில் ஒரு பிணம் இருப்பதாக நாகராஜனுடைய அண்ணன் அவருக்கு தகவல் தெரிவித்தனர்
அதன் பேரில் இந்த ஏரிக்கு சென்ற அவரது அண்ணன் கிருஷ்ணராஜா இவர் என்னுடைய தம்பிதான் என்று அவர் கூறினார்
அதன்படி வாலாஜா போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் ஏரியில் சடலமாக இருந்த நாகராஜனின் உடலை கைப்பற்றி வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
ஆயுத பூஜைக்கு மெக்கானிக் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு பிறகு வீடு திரும்பாமல் ஏரியில் பிணமாக மிதந்த வரை கண்டு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது