நெமிலி அடுத்த பள்ளூர் பகுதியில் நேற்று அரக்கோணம் தாசில்தார் பழனி ராஜன், மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்தார்.

நெமிலி அடுத்த பள்ளூர் பகுதியில் மணல் கடத்தியதாக அரக்கோணம் தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தி னம் இரவு அரக்கோணம் தாசில்தார் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பள்ளூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சிலர் டிராக்டரில் மணல் அள்ளி கொண்டு இருந்தனர்.

தாசில்தார் வாகனத்தை பார்த்ததும் மணல் அள்ளி கொண்டிருந்தவர்கள் டிராக்டரை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். அதனை தொடர்ந்து அரக்கோணம் தாசில்தார் பழனி ராஜன் டிராக்டரை பறிமுதல் செய்து நெமிலி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதன் தொடர்பாக நெமிலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தப்பியோடிவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.