அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்புக்கு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து, தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரையில் 1 முதல் 8ம் வகுப்புக்கும், நவ.1ம் தேதி முதல் வகுப்புகள் சுழற்சி முறையில் நடக்க உள்ளது. இந்நிலையில், நீண்ட காலத்துக்கு பிறகு மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருகை தர உள்ள நிலையில், அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது அவசியம். அதற்கு ஏற்றவாறு, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் கலைநிகழ்ச்சிகள், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் தெரிவித்துள்ளது.

அதன்படி, வேலுார் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு போட்டிகளை நடத்தவும், இதன்மூலம் மாணவர்கள் எழுச்சியுடன் கற்றல் பணியை மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கையை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.