வேலூர் மின் பகிர்மான வட்டம் ராணிப்பேட்டை கோட்டத்தைச் சேர்ந்த வாலாஜா ஒழுகூர் மற்றும் முசிறி துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது . 

எனவே 16 - ந்தேதி காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை வாலாஜா நகரம் , தேவதானம் , குடிமல்லூர் , வி.சி. மோட்டூர் , வன்னிவேடு , அம்மணந்தாங் கல் , பெல்லியப்பாநகர் , டி.கே.தாங்கல் , சென்னசமுத்திரம் , பூண்டி , சாத்தம்பாக்கம் , பாகவெளி , முசிறி , வள்ளுவம்பாக் கம் , அனந்தலை , ஒழுகூர் , வாங்கூர் , கரடிகுப்பம் , ஜி.சி. குப்பம் , தலங்கை , செங்காடு மோட்டூர் , செங்காடு , கன்னிகாபுரம் , எடையகுப்பம் , படியம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது .

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ராணிப்பேட்டை செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார் .