வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோர்தானா அணை நிரம்பி , வழியும் தண்ணீரால் கடந்த சில தினங்களாக நெல்லூர்பேட்டை ஏரிக்கு தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி நிரம்பி போனது.

ஏரி நிரம்பிய தகவல் அறிந்ததும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்களும், குடியாத்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர்களும் ஏராளமானோர் ஏரி நிரம்பி வழிவதை சென்று பார்த்து வந்தனர். பொதுமக்கள் சிலர் பூஜை செய்து ஏரிநீர் வழிந்ததை வரவேற்றனர்.

குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் லலிதா, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில் தாமஸ், நீர்வள ஆதார துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு தண்ணீர் வருவதை கண்காணித்து வருகின்றனர்