வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாலும் , ஏற்கனவே மழை பெய்து வருவதாலும் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி கொசுப்புழுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆக வாய்ப்பு உள்ளது . 
மேலும் டெங்கு பரவும் அபாயமும் உள்ளது . இந் நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காவேரிப்பாக்கம் டவுன் பஞ் ,. சார்பில் செல்லியம்மன் கோயில் தெரு , பஜார் தெரு , கண்ணாங்குளத்தான் தெரு பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட 15 வார்டுகளிலும் கொசுப் புழு ஒழிக்க புகை மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது .

இந்த வாரம் முழுவதும் காலிமனைகள் , தொழிற்சாலைகள் , பள்ளிகள் , கடைகள் போன்ற பகுதிகளில் புகை மருந்து தெளிக்கும் பணி நடைபெறும் என செயல் அலுவலர் மனோகரன் தெரிவித்தார். கனகராஜ் , துப்புரவு மேற்பார்வையாளர் பன்னீர் உள்ளிட் டோர் உடனிருந்தனர் .