நெமிலி அருகே, ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் இறந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கரியாகுடல் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி, 50, கூலித் தொழிலாளி. இவர் மனைவி சாந்தி, 45. இவரது மகன் சாரதி,14, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, 7:00 மணிக்கு கொசஸ்தலம் ஆற்றில் சாரதி குளிக்கச் சென்றார். அப்போது திடீரென வந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அவர் நீரில் மூழ்கி இறந்தார். நெமிலி போலீசார், சாரதி உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

நெமிலி: நெமிலி அருகே, ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் இறந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கரியாகுடல் பகுதியை சேர்ந்தவர்