ஆற்காடு அருகே அரசு டவுன் பஸ் மீது வேன் மோதியதில் 6 பேர் படு காயம் அடைந்தனர்.

ஆற்காடு அடுத்த நாட்டேரியில் இருந்து அரசு டவுன் பஸ் நேற்று முன்தினம் மாலை பயணிகளுடன் புறப்பட்டது. இரவு 7 மணியளவில் புதுப்பாடி ஏரிக்கரை அருகே வரும்போது எதிரே வேகமாக வந்த, வேன் அரசு டவுன் பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் வந்த டிரைவர், வேனில் வந்தவர் மற்றும் பஸ் பயணிகள் என 6 பேர் படுகாயம் அடைந்தனர். 

விபத்தை கண்ட பொதுமக்கள் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆற்காடு மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.