அஞ்சல் வாரவிழாவையொட்டி 5 வயது பெண் குழந்தை ஒரு நாள் தபால்காரராக சீருடை அணிந்து தபால் பட்டுவாடா செய்து அசத்தியது.
நாடு முழுவதும் அஞ்சல் வாரவிழா கடந்த 11ந் தேதி தொடங்கி 16ந் தேதி நிறைவுற்றது. அதன்படி வாலாஜா அஞ்சலக உட்கோட்டத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

அதன் ஒருபகுதியாக செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 1000 கணக்குகள் தொடங்கப்பட்டது. நேற்று பள்ளி சிறுவர் சிறுமியர்களை வாலாஜா அஞ்சலகத்திற்கு நேரில் வரவழைத்து அவர்களுக்கு அஞ்சல் சேவை குறித்து அஞ்சல் அதிகாரி சவுந்தரி விளக்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வாலாஜா அஞ்சலகத் தில்பணியாற்றும் தபால் காரர் யமுனாவின் ஐந்து வயது மகள் ஜெய்ரித்திகா நேற்று தன்னுடைய தாயுடன் சேர்ந்து தபால் காரரின் சீருடையை அணிந்து நேற்று முழுவதும் தபால் பட்டுவாடா செய்தார்.

இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து நேற்று ராணிப்பேட்டை தலைமை அஞ்சலகத்தில் ரத்ததான முகாம் நடை பெற்றது.