வேலூர் மாவட்டம் சேன்பாக்கம் புத்து கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர். இவரது 19 வயது மகள் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் இளம் பெண்ணின் தந்தை மனோகர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் அக்டோபர் 3ஆம் தேதி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் குப்பன் காணாமல் போன இளம்பெண்ணின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.