ஆற்காடு அருகே ஆடு திருடிய வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் காயிதேமில்லத் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஜாவித் வியாபாரி . இவர் ஆடு சொந்தமாக வளர்த்து வருகிறார் . 

இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த பைரோஸ் ( 19 ) என்ற வாலிபர் அவரது ஆட்டை திருடியுள்ளார் . அதைக்கண்ட பொது மக்கள் அவரை கையும் களவுமாக பிடித்து ஆற்காடு டவுன் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர் . 

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் மகாரா ஜன் மற்றும் போலீசார் ஆடு திருடிய வாலிபர் பைரோசை கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .