தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டு வருகிறது. மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. தற்போது தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளது. மேலும் சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் தற்போது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழைப்பொழிவு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் பெய்துள்ளது. அதன்படி அங்கு 11 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் ஒன்பது சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வீரகனூர் பகுதியில் 8 சென்டி மீட்டர் மழையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

முசிறி, ஏற்காடு, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் ஐந்து நிமிடம் மழை பதிவாகியுள்ளது.