✈ 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி வால்வெள்ளிக்கு மிக அருகில் 2,200 கி.மீ தூரத்திற்குள் சென்றது.

✈ 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது வியாழன் கோளின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.


முக்கிய தினம் :-


உலக அமைதி தினம்

🐦 உலக அமைதி தினம், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

🐦 உலக சமாதான முயற்சியின் போது ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹமர்சீல்ட் 1961ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தது வரலாற்று சுவடாக பதிவாகியுள்ளது. இவர் உயிர் துறந்த நாளையே உலக அமைதி தினமாக அனுசரிக்கின்றோம்.

🐦 இதனை அடுத்து 2002ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜ.நா. பிரகடனத்தின் மூலம் செப்டம்பர் 21ஆம் தேதி உலக அமைதி தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🐦 உலக வரலாற்றில் ஏற்பட்ட கசப்பான மற்றும் சமாதானமற்ற நிகழ்வுகளினால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடமைகளின் சேதங்களினால் உலக சமாதான தினத்தை உருவாக்கும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டது.

🐦 மனித உள்ளங்களினால் தான் போர் எண்ணம் உருவாக்கப்படுவதால் மனித உள்ளத்தாலே அமைதிக்கான அரண்களும் உருவாக்கப்பட வேண்டும் என்பதே யுனெஸ்கோவின் வாசகமாக அமைந்துள்ளது.

🐦 இன்று உலகில் பல பகுதிகளில் சமாதானத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் இன்று மட்டுமன்றி ஒவ்வொரு நாட்களுமே மனித வாழ்வில் சமாதானம் நிலைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.


பிறந்த நாள் :-


ஹெச்.ஜி.வெல்ஸ்

✍ வரலாறு, அரசியல், சமூகம் ஆகிய அனைத்து களங்களிலும் தனது படைப்புகளால் தனிமுத்திரை பதித்த ஹெச்.ஜி.வெல்ஸ் (Herbert George Wells) 1866ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள ப்ரூம்ளி நகரில் பிறந்தார்.

✍ இவரது முதல் நாவலான தி டைம் மெஷின் 1895-ல் வெளிவந்து, மகத்தான வெற்றி பெற்று, இலக்கிய உலகில் பரபரப்பாக பேசப்படும் எழுத்தாளர் ஆனார்.

✍ இவர் தொடர்ந்து அறிவியல் புனைகதைகள் எழுதி வந்தார். 1920-ல் வெளிவந்த அவுட்லைன் ஆஃப் தி வேர்ல்டு புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. தி ஐலண்ட் ஆஃப் டாக்டர் மாரோ, தி இன்விசிபிள் மேன், தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ், தி ஷேப் ஆஃப் திங்ஸ் டு கம் ஆகிய நூல்கள் இவருக்கு பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது.

✍ வாழ்நாளில் சுமார் 50 ஆண்டு காலம் எழுத்திற்காக தன்னை அர்ப்பணித்த தொலைநோக்கு எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் தனது 80-வது வயதில் (1946) மறைந்தார்.