SBI is giving a great business to earn 60 thousand rupees profit per month 

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த படியே பணம் சம்பாதிக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த வணிக வாய்பு காத்திருக்கிறது. இதன் மூலம் நீங்கள் வீட்டில் அமர்ந்த படியே, மாதம் 60 ஆயிரம் ரூபாய் எளிதாக சம்பாதிக்கலாம். இந்த சிறந்த வாய்ப்பை நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) உங்களுக்கு வழங்குகிறது.

பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் உரிமம் (SBI ATM Franchise)

பாரத ஸ்டேட் வங்கியின் எஸ்பிஐ ஏடிஎம் பிரான்சைஸை எடுத்து எளிதாக சம்பாதிக்கலாம். வங்கியின் ஏடிஎம் மெஷின்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் நிறுவுவதில்லை. தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஏடிஎம் மெஷின்களுக்கு பிரான்சைஸ் உரிமையை எடுப்பதன் மூலம் நீங்களும் நல்ல பணம் சம்பாதிக்கலாம்.

எஸ்பிஐ ஏடிஎம் பிரான்சைஸ் உரிமையை பெறுவதற்கான நிபந்தனைகள்


1. எஸ்பிஐ ATM பிரான்சைஸ் உரிமையை பெற, உங்களிடம் 50-80 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.

2. மற்ற ஏடிஎம்களிலிருந்து அதன் தூரம் 100 மீட்டராக இருக்க வேண்டும்.

3. ATM நிறுவுவதற்கான இடம் தரை தளத்திலும், மிக நன்றாக தெரியும் படியான இடத்திலும் இருக்க வேண்டும்.

4. 24 மணி நேர மின்சாரம் இருக்க வேண்டும், இது தவிர, 1 கிலோவாட் மின் இணைப்பும் அவசியம்.

5. ATM ஒரு நாளைக்கு சுமார் 300 பரிவர்த்தனை மேற்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.

6. ஏடிஎம் உள்ள இடம் கான்கிரீட்டினால் ஆன கூரையை கொண்டதாக இருக்க வேண்டும்.

7. V-SAT நிறுவுவதற்கு ஏடிஎம் நிறுவப்படும் குடியிருப்பு அல்லது பகுதிக்கான நிர்வாகத்திடம் இருந்து நோ அப்ஜெக்‌ஷன் சான்றிதழ் தேவை.

எஸ்பிஐ ஏடிஎம் உரிமம் பெற தேவையான ஆவணங்கள்


1. ஐடி சான்று - ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை

2. முகவரி சான்று - ரேஷன் கார்டு, மின்சார கட்டணம்

3. வங்கி கணக்கு விபரம் மற்றும் பாஸ்புக்

4. புகைப்படம், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண்.

5. பிற ஆவணங்கள்

6. ஜிஎஸ்டி எண்

7. நிதி ஆவணங்கள்



விண்ணப்பிக்கும் முறை:


நீங்கள் டாடா இண்டிகாஷ் தளத்தைப் பார்வையிட விரும்பினால் இந்த இணைப்பு (www.indicash.co.in). 

முத்தூட் ஏடிஎம் (www.muthootatm.com/suggest-atm.html)

மற்றும் இந்தியா ஒன் ஏடிஎம் (https://india1atm.in/rent-your-space/)
தளங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

டாடா இண்டிகாஷ் மிகப்பெரிய நிறுவனம். 

ஏடிஎம் நிறுவ, நீங்கள் ரூ.2 லட்சம் பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டும், இது திருப்பித் தரப்படும். 3 லட்சம் செயல்பாட்டு மூலதனமாக செலுத்த வேண்டும்.

வருமானத்தைப் பற்றி பேசுகையில், ஒரு பண பரிவர்த்தனைக்கு ரூ.8 மற்றும் ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு ரூ.2 சம்பாதிக்கப்படுகிறது. தினமும் 250 பரிவர்த்தனைகள் இருந்தால், அதில் 65% ரொக்கம் மற்றும் 35% ரொக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் எளிதாக மாதம் 45000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். 300 பரிவர்த்தனைகள் இருந்தால் உங்கள் வருமானம் மாதத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும்.