ராணிப்பேட்டை: உள்ளாட்சி தேர்தலில், ராணிப்பேட்டை மாவட்டத்தில், 486 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில், 13 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 95 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 17 பேர் வாபஸ் பெற்றனர். 68 பேர் போட்டியிடுகின்றனர்.

127 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கு 684 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனர். 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 165 பேர் வாபஸ் பெற்றனர். 508 பேர் போட்டியிடுகின்றனர்.

288 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 1,247 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 27 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 319 பேர் வாபஸ் பெற்றனர். 22 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 879 பேர் போட்டியிடுகின்றனர்.

2,020 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 5,625 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 43 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 488 பேர் வாபஸ் பெற்றனர். 464 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 4,630 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் பதவிகளுக்கு 5,085 பேர் களத்தில் உள்ளனர்.