ஆன்லைன் ஜாப் என்றாலே மோசடிகள் அதிகமாகவே காணபடுகின்றன. இப்படிபட்ட சூழ்நிலையில் நாம் எப்போதுமே கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் ஏமாற்றுவற்க்கு என்ற பல மோசடி கும்பல் இனையத்தில் செயல்பட்டு வருகின்றனர். எப்போதுமே ஏமாறுபவர்களை குறிவைத்தே இவர்கள் செயல்பாடுகள் இருக்கும்.

அதனால் ஒட்டுமொத்தமாக அனைவரையும் மோசடி செய்பவர்கள் என்று சொல்லிவிட முடியாது.Online Job ஆன்லைன் மூலமாக பலர் மில்லியன் கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
எப்போதுமே ஆன்லைனில் நாம் வேலை தேடும்போது அந்த நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் பணிகளை செய்வதற்கு எந்த ஒரு நிறுவனமும் நம்மிடம் பணம் கேட்பதில்லை. உதாரனமாக நாம் நேரடியாக வேலைக்கு சேரும் போது எந்த துறையிலும் பணியில் சேர்வதற்கு நம்மிடம் பொதுவாக பணம் கேட்ப்பது இல்லை அதேபோல்தான் ஆன்லைன் மூலமாக செய்கூடிய வேலைக்கு பணம் கேட்பது கிடையாது.

ஆன்லைன் நீங்கள் வேலை செய்வதற்க்கு அந்த இனையதளத்தில் இனைய ரிஜிஸ்ட்டேஷன் பீஸ் என்ற குறுப்பிட்ட தொகையை ஆன்லைன் மூலமாக செலத்த சொன்னால் கண்டிப்பாக அது ஒரு மோசடி கும்பல்.

மேலும் 90% இனையதளங்கள் ஏமாற்று வேலையை செய்து வருகின்றன. அப்படியே ஒரு நம்பிக்கையான இனையதளமாக இருந்தாலும் உங்களிடம் ரிஜிஸ்ட்டேஷன் தொகையை பெற்றுகொண்டு அவர் இனையவழி மூலமாக உங்களுக்கு கொடுக்கூடிய வேலைக்கு மிக மிக குறைந்த அளவு பணம் மட்டுமே கிடைக்கும். உதாரனமாக நீங்கள் செலுத்திய தொகையை கூட உங்களால் திருப்பி எடுக்க முடியாத நிலைதான் இருக்கும்.

மேலும் அவர்கள் உங்களை நம்ப வைப்பதற்க்காக அவர்கள் அந்த வேலை சம்மந்மான டெமோவை சீடி மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம் அதற்க்கன தொகையை நீங்கள் செலுத்தினால் மட்டுமே உங்களால் பதிவுசெய்யபடும் என்று கூட இருக்கும். இது போல் எனது நன்பர் ரூபாய் 2500 கட்டி அந்த டெமோ சீடியை வாங்கி அதனால் அவர் ஒரு நாளைக்கு 5 ருபாய் மட்டுமே அவருடைய ஐடியில் கிடைத்து. மேலும் அவரால் 1 ரூபாய் கூட பெற முடியவில்லை என்பேத உன்மை.