கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த பூண்டி கிராம அணைக்கட்டு தெருவில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் சோதனை


அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் அணைக்கட்டு தெருவில் வசிக்கும் யுவராஜ் (வயது 47) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.

கைது

அதில் 137 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக யுவராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.