ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு இடத்தினை பார்வையிட்டார்.

இதில் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இந்த ஆய்வின் உடனிருந்தனர்