ராணிப்பேட்டை மாவட்டம் முகத்துக்கடை பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது கொரோனா தடுப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப் படுகின்றதா மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது வாலாஜாபேட்டை வட்டாட்சியர் மற்றும் ராணிப்பேட்டை நகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.