சிறுமியை சீரழித்த தொழிலாளி போக்சோவில் கைது 
ராணிப்பேட்டை மாவட்டம் , ஆற்காடு ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சுரேஷ் ( 23 ) , கூலித்தொழிலாளி. இவர் ஆற்காட்டை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று வந்துள்ளார். மேலும் , உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ் பெக்டர் வாசுகி, சப்-இன்ஸ் பெக்டர் உஷா ஆகியோர் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை சீரழித்த சுரேஷ் என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்து, ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .