ஆற்காடு அடுத்த தாமரைப்பாக் கத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், விவசாயி.

இவருக்கு சொந்தமான பசு நேற்று முன்தினம் மாலை அங்குள்ள விவசாய நிலம் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, அங்குள்ள 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. 

சத்தம் கேட்ட அப்பகுதிமக்கள் உடனடியாக ஆற்காடு தீயணைப்புத்துறையினருக்கு தெரிவித்தனர். 

நிலைய அலுவலர் கோபால் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கயிறு மூலம் சுமார் அரைமணிநேரம் போராடி பசுவை பத்திரமாக மீட்டு கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர்.